tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர்

கங்கை நதிக்கரையில் சிறப்பு வழிபாடு நடத்தினார்

கங்கை நதிக்கரையில் சிறப்பு வழிபாடு நடத்தினார்

வாரணாசி, மே 14

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியில் 3- வது முறையாகப் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அபிஜித் முகூர்த்தம் என்ற அரிதான முகூர்த்தத்தில் பிரதமர் வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமரின் வேட்புமனுவை 4 பேர் முன்மொழிந்து கையெழுத்திட்டனர். அப்போது பிரதமருடன் மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

7 கட்டங்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தேர்தலில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்காகப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இம்முறையும் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்பில் அவர் தீவிரமாகி உள்ளார்.

ஜூன் 1ம் தேதி 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல். அப்போது இந்த தொகுதிக்கான ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே (மே 14) கடைசி நாள் என்பதால், இன்று பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய வாரணாசி வந்தார். முன்னதாக அவர் கங்கை ஆற்றங்கரையில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

இந்த பூஜைக்கு பிறகு மோடி கூறும்போது,

‘கங்கை நதி என்னைத் தத்தெடுத்துக் கொண்டது. எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி தாயை போல் அனைவரையும் காக்கிறது. ரூ.140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன். இது கடவுள் உத்தரவு’ என்றார்.

தாய் குறித்து பேசும்போது மோடி கண்கள் கலங்கினார். அவரின் குரல் தழுதழுத்தது.

முன்னதாக மோடி, எக்ஸ் வலைதளத்தில் கூறும்போது, ‘காசியுடனான எனது உறவு அற்புதமானது, ஒருங்கிணைந்தது மற்றும் ஒப்பிட முடியாதது. அதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்றுதான் என்னால் சொல்ல முடியும்’ என்றார்.

பின்னர், வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை உறுதிமொழி படிவத்தை படித்து உறுதியளித்துவிட்டு, தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க