tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூலை 3–

மத்திய அரசு 2019ல் தேசிய கல்விக்கொள்கையை அறிமுகம் செய்தது. இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. 2021ல் ஆட்சிக்கு வந்த பின்னர் திமுக அரசு, தேசிய கல்விக் கொள்கைக்கு, மாறாக மாநில கல்விக் கொள்கையை வகுக்க முடிவு செய்தது. இதை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்டக்குழு அமைத்தது. 

இந்தக் குழு கொள்கை அறிக்கையை தயாரித்து (ஆங்கிலத்தில் 600, தமிழில் 550 பக்கங்கள்) சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியது.

இதில், "தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை பின்பற்றப்படவேண்டும். 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த தேவையில்லை. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும், எந்த உயர்கல்விக்கும் நுழைவுத்தேர்வு வேண்டாம்" என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகள் தரப்பட்டுள்ளன.

 அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய பரிந்துரைகள்:-

* பள்ளிக்கல்வியில் தமிழை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம். தொடக்க நிலை வகுப்பு முதல் பல்கலைக்கழக நிலை வரை தமிழ் வழிக் கல்வியை வழங்க வேண்டும். 

* தமிழ் கற்பித்தல், கற்றல் தொடர்பான ஆராய்ச்சி பிரிவை மாநில அரசு கொண்டு வரவேண்டும். 

* 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களுக்கு சேவை செய்யும் அங்கன்வாடி மையங்களுக்கு ‘தாய் – குழந்தை பராமரிப்பு மையம்’ என்று பெயரிட வேண்டும். 

* மழலையர் குழந்தைகள் படிக்கும் எல்கேஜி, யுகேஜி பள்ளிகள் ‘குழந்தை மேம்பாட்டு மையங்கள்’ என அழைக்கப்படும். 

* ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ என்பதுடன் ‘ஸ்போக்கன் தமிழ்’ என்பதில் முதன்மை கவனம் செலுத்த வேண்டும்.

* கல்வியாண்டில் ஜூலை 31ம் தேதி 5 வயதை நிறைவு செய்யும் குழந்தைகள் ஒன்றாம் வகுப்பில் சேரலாம். அதன்படி, 5+3+2+2 என்ற நிலைகள் (1–5, 6–8, 9–10, பிளஸ் 1 – பிளஸ்2) பின்பற்ற வேண்டும். 

* தமிழ், கணிதம், அறிவியல் போன்றவற்றுடன் சமூக சமத்துவம், நீதி கருத்தை கொண்ட சமூக கலாசார, பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தை செயல்படுத்தும் பாடத்திட்டம் உருவாக்க வேண்டும். 

புத்தக உதவியுடன் தேர்வு

* மனப்பாடம் செய்வதற்கான தேவையை நீக்கி, மாணவர்கள் தங்கள் அறிவாற்றலை பிரதிபலிக்கவும், அதனை பயன்படுத்தவும் அனுமதிக்க வேண்டும். அதேபோல், புத்தகத்தின் உதவியுடன் தேர்வு எழுதும் நடைமுறையை தொடரலாம். 

* வாரியத் தேர்வுகளுக்கு சீர்திருத்தம் தேவை. மாணவ-,மாணவிகளின் மன அழுத்தத்தை குறைப்பது தேர்வுகளின் முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும். 

* உடற்கல்வி வகுப்புகளை வாரத்துக்கு 2 முதல் 4 பாட வேளைகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும். 

ஆசிரியர் பணிக்கு கடும் தேர்வு

* ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) புத்தக கற்றலை மட்டும் கொண்டிராமல், கலை மற்றும் அறிவியலுக்காக ஆரோக்கியமான அணுகுமுறை, சமூக மற்றும் ஜனநாயக கோட்பாடுகளை பற்றிய புரிதல், சாதி, பாலினம், மொழி, கலாச்சாரம், உள்ளூர் அறிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 

* ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் தேர்வரை, பல மதிப்பீட்டு முறைகளை கொண்டு கடுமையான தேர்வு செயல்முறையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

/தனியார் பயிற்சி மையத்துக்கு பூட்டு/

* பள்ளிகள், கல்லுாரிகளுக்கு இணையாக தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களால் நடத்தப்படும் எல்லா பயிற்சி மையங்களையும் தடை செய்ய அரசு கடுமையாக பரிசீலிக்க வேண்டும். 

* பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கூடாது. 

* ஆங்கில வழி பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோரிடம் தனியார் கல்வி நிறுவனங்கள் பணம் பறிப்பதை தவிர்க்க கட்டண கட்டமைப்பை கண்காணிக்க வேண்டும். தனியார் சுயநிதி பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் கட்டணக்குழுவின் அதிகாரங்கள் மாநிலத்தில் நிறுவப்பட்டு இயங்கும் சிபிஎஸ்இ மற்றும் பிற வாரிய பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். 

* பிளஸ்1 வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் திட்டத்தை 9ம் வகுப்பில் இருந்து நீட்டிக்கலாம். 10ம் வகுப்பு வரையில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் அரசின் எல்லா உதவிகளையும் பிளஸ்2 வரை விரிவுபடுத்தலாம். 

* பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வுகளில் பெற்ற ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண்களை கொண்டே உயர்கல்வியில் எல்லா படிப்புகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். எந்த உயர்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் எந்த நுழைவுத்தேர்வையும் ஏற்க முடியாது. 

3 ஆண்டு கட்டாயம்

* 3 ஆண்டு இளநிலை, 2 ஆண்டு முதுநிலை படிப்புக்கான திட்டங்கள் தொடரும். பல்கலைக்கழக மானியக்குழுவின் பாடத்திட்ட கட்டமைப்பில் உள்ள சிக்கல்களை கருத்தில்கொண்டு, 4 ஆண்டு இளநிலை திட்டங்களில் தொடர மாணவர்களுக்கு கூடுதல் விருப்பத்துடன் நீட்டிக்கப்படலாம். 

* உயர்கல்வியை தனியார் மயமாக்குவதையும், வணிக மயமாக்குவதையும் தடுக்கும் வகையில், உயர்கல்வியில் அரசு அதிக முதலீடு செய்து, தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களை நிறுவ வேண்டும். 

* தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்துக்கு சொந்தமாக பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை மற்றும் கல்லுாரி இருக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க