Date : 26 June 2026, 10:00 pm
Posted By : ADMIN

ஜூலை 1-ல் ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை..! - News7 Tamil

ஜூலை 1-ல் ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை..! - News7 Tamil

இந்தியா-ஜப்பான் இடையே ஆண்டு தோறும் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறும். இதில் இரு நாடுகளுக்கும் இடையே உறவுகளை மேம்படுத்துவது, ராணுவ பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். 15-வது உச்சிமாநாடு கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஜாப்பானில் நடைபெற்றது. இதற்காக பிரதமர் மோடி ஜாப்பானுக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்த நிலையில் இந்தியா -ஜப்பான் இடையே இந்த ஆண்டிற்கான 16-வது உச்சிமாநாடு ஜூலை 1 முதல் 3-ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜூலை 1-ஆம் தேதி ஜப்பான் பிரதமர் சானே டகாய்ச்சி டெல்லி வரவுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் தூதர் ஓனோ கெய்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓனோ கெய்ச்சி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பிரதமர் சானே கட்டாய்ச்சி ஜூலை 1-ஆம் தேதி டெல்லி வருகிறார். பிரதமராக தனது இந்தியப் பயணத்தின் போது, அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் உச்சி மாநாட்டை நடத்துவார்.இரு தலைவர்களும் வர்த்தக தலைவர்களுடன் ஒரு பெரிய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு, இந்தியா-ஜப்பான் உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார். “மண்டாடி” படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு! INDvsIRE: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – அண்ணாமலை வரவேற்பு! “என்.எல்.சி பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும்” – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்