ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக நான் பொறுப்பேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. நான் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இந்த இரண்டு ஆண்டுகளில், ஒவ்வொரு இந்தியனின் குரலையும் அதிகார மையங்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே எனது அனைத்து நாட்களையும் அர்ப்பணித்தேன். நீட் (NEET) தேர்வு எழுதுபவர்களுக்கான போராட்டம், தேர்தல் முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருதல் அல்லது அரசியலமைப்பைப் பாதுகாத்தல் என ஒவ்வொரு களத்திலும் நான் உங்களுடன் நின்றிருக்கிறேன்,இன்றும் உங்களுடன் நிற்கிறேன்; என்றும் உங்களுடன் நிற்பேன். வீதிகள் முதல் நாடாளுமன்றம் வரை, உங்கள் நம்பிக்கையே எனது மிகப்பெரிய பலம். இந்தப் பயணம் நீண்டது, ஆனால் எனது உறுதி மாறாதது. உங்களுக்காக ஒவ்வொரு போராட்டத்தையும் நான் தொடர்ந்து முன்னெடுப்பேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மண்டாடி” படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு! INDvsIRE: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – அண்ணாமலை வரவேற்பு! “என்.எல்.சி பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும்” – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 9:58 pm
Posted By : ADMIN
"உங்கள் நம்பிக்கையே எனது மிகப்பெரிய பலம்" - ராகுல் காந்தி! - News7 Tamil