தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக 645 காசுகளாக (ரூ.6.45) இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே இன்று முட்டை கொள்முதல் விலை 650 காசுகளாக (ரூ.6.50) அதிகரித்துள்ளது. வரும் நாட்களிலும் முட்டை விலை அதிகரிக்கும் என கூறப்படுறது. சில்லறை விற்பனை கடைகளில் முட்டை விலை ரூ.8 வரை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 9:12 pm
Posted By : ADMIN
புதிய உச்சம்... நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை உயர்வு