நாளை இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது. இதன்படி சென்னை எழும்பரில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் நாளை(ஜூன் 27) தாழையூத்து வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மறுமார்க்கமாக நெல்லையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் இந்த ரயிலானது ஜூன் 28ஆம் தேதி தாழையூத்து நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக திருநெல்வேலி மற்றும் வாஞ்சி மணியாச்சி இடையே அறிவிக்கப்பட்டிருந்த பகுதி ரத்து தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில் கான்பூர் சென்ட்ரல் மற்றும் மதுரை இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. கோடைக்கால கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 9:02 pm
Posted By : ADMIN
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!