திருவள்ளூரில் ஆம்னிஸ் பஸ் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு இன்று காலை ஆம்னி பஸ் வந்துகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே வந்தபோது ஆம்னி பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை உடனடியாக நிறுத்தினார். பின்னர், பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக கீழே இறங்கினர். மேலும், தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், அதற்குள் பஸ் முழுவதும் தீ வேகமாக பரவியது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், பஸ்சில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் பஸ் முழுவதும் தீக்கிரையானது. இந்த தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 8:14 pm
Posted By : ADMIN
திருவள்ளூரில் அதிர்ச்சி: ஆம்னி பஸ் தீப்பற்றி எரிந்து விபத்து