Date : 26 June 2026, 7:57 pm
Posted By : ADMIN

இன்றைய செய்திகள் ஜூன் 26 - நேரலை

இன்றைய செய்திகள் ஜூன் 26 - நேரலை

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு நாளையொட்டி, போதை ஒழிப்பில் சிறப்பாகச் செயல்பட்டதாக காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் உள்பட 15 பேருக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதக்கங்கள், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் முதல்வரால் வழங்கப்படும். வெனிசுவேலாவில் வியாழக்கிழமை (ஜூன் 25) நண்பகலில் வெறும் 39 விநாடிகள் மட்டுமே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சுமார் 235 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் கார்லஸ் அல்வராடோ கூறியுள்ளார். புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பமாக கொலைத் திட்டத்தை தீட்டியது யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றது குறித்து... தில்லியிலிருந்து அமிருதசரஸ் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தரையிறங்க காத்திருந்த நேரத்தில், பாகிஸ்தான் வான் வெளிக்குள் சென்று வந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.