தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடிப்படையை அறிவித்தார். இதற்காக புதிய காவலர்களை பணியில் சேர்க்க அறிவிப்பு வெளியிடப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது. மேலும் டாஸ்மாக் கடைகள் மூடல், விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி, பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் திட்டம் என பல அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், 2026ஆம் ஆண்டின் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி (26.06.2026), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, "போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம்" 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், முதலமைச்சர் விஜய் 2026-ம் ஆண்டிற்கான பதக்கங்களை காவல் அதிகாரிகள்/காவல் ஆளிநர்களுக்கு வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்கள். 1. விவேகானந்த சுக்லா, இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், கடலூர் மாவட்டம்.2. ஜி. சந்தீஷ், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், இராமநாதபுரம் மாவட்டம்.3. ஸ்ரீ. லட்சுமணன். கூடுதல் காவல் கண்காணிப்பாளர், போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு, சென்னை.4.வை. மனோஜ்குமார், காவல் உதவி ஆணையாளர். போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு, சென்னை பெருநகர காவல்.5. மோ.கண்ணன், காவல் ஆய்வாளர்,மத்திய நுண்ணறிவுப் பிரிவு, திருச்சி மண்டலம்.6.பொ. காமராஜ், காவல் ஆய்வாளர். மத்திய நுண்ணறிவுப் பிரிவு, கோயமுத்தூர் மண்டலம்.7. மு. அருண். காவல் உதவி ஆய்வாளர். குரங்கனி காவல் நிலையம், தேனி மாவட்டம்.8. கே. ராஜ்குமார். தலைமைக் காவலர் 1868, குமுளி காவல் நிலையம், தேனி மாவட்டம்.9.. க. கார்த்திகேயன், தலைமைக் காவலர் - 348. வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம், நாகப்பட்டினம் மாவட்டம்.10. அ. குத்புதீன், தலைமைக் காவலர் - 1288, கோட்டைப்பட்டினம் காவல் நிலையம், புதுக்கோட்டை மாவட்டம்.11. க.ராமர், சிறப்பு உதவி ஆய்வாளர் 973, நல்லூர் காவல் நிலையம், திருப்பூர் மாநகரம்.12. மு. ஐய்யப்பன், தலைமைக் காவலர் - 2244, மதுவிலக்கு அமலாக்க பிரிவு, திருநெல்வேலி.13. ந. பிரேம் குமார், தலைமைக் காவலர் 46983, R-3 அசோக் நகர் காவல் நிலையம், சென்னை பெருநகர காவல்.14. உ.பி. செந்தில்குமார். சிறப்பு உதவி ஆய்வாளர் -1138, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, கரூர் மாவட்டம்.15. ச. ராமகிருஷ்ணண், தலைமைக் காவலர் -2120, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு, தேனி அலகு. இந்த பதக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2026ஆம் ஆண்டிற்கான சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 7:50 pm
Posted By : ADMIN
காவல் துறையினருக்கு குஷி.! காலையிலேயே அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட சிஎம் விஜய்