சென்னை: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஜூலை 2 முதல் ஜூலை 22 வரை துறைவாரியான ஆய்வுக் கூட்டங்களை நடத்த உள்ளார். விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 47 நாட்கள் ஆகின்றன. இந்த நிலையில், சமீபத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணி அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 18 அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து தவெக அரசின் முதல் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்பட உள்ளது என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது. இந்த நிலையில், மாநில அரசின் வரவிருக்கும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், நடைபெற்று வரும் திட்டங்களின் செயல்பாடு மற்றும் துறைகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக, முதலமைச்சர் விஜய் தலைமையில் வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி தொடங்கி ஜூலை 22 வரை துறைவாரியான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான விரிவான அட்டவணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள மாநில பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்தும், ஒவ்வொரு துறையின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் விரிவாக ஆலோசிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 11:16 pm
Posted By : ADMIN
தமிழக பட்ஜெட்: 20 நாட்கள் துறைவாரியாக ஆலோசனை மேற்கொள்ளும் முதல்வர் விஜய்