திமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான எவ வேலு வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் ஜெயராம் வெங்கடேசன், அறப்போர் இயக்கம், சென்னை அளித்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமையக குற்ற எண்.3/2026. U/s 120(B), 409, 468, 471 r/w 109 of IPC and Sections 7(c) and 13(2) r/w 13(1) (a) ஊழல் தடுப்பு சட்டம் 1988-ன் கீழ் திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் 2018 (திருத்தப்பட்டவாறு) மற்றும் எதிரி 11ன் மீது U/s 120 B, 420, 409 r/w 109, 468, 471 of IPC and Section 7(c) r/w 12, 13(2) r/w 13 (1) (a) r/w 12 ) ஊழல் தடுப்பு சட்டம் 1988-ன் கீழ் திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் 2018 (திருத்தப்பட்டவாறு) 24.06.2026 (இன்று) எ.வ.வேலு, முன்னாள் அமைச்சர், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் மீதும் மற்றும் 9 மாநில அரசு ஊழியர்கள், நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மற்றும் ஒரு ஒப்பந்தகாரர் (தனி நபர்) மீதும் வழக்கு பதியப்பட்டது. அவ்வழக்கானது 2022ம் ஆண்டு அரசு சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், பயண தரத்தை மேம்படுத்துதல் மற்றும் குறுக்கு வடிகால் அமைப்புகளை மறுசீரமைத்தல் ஆகிய பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் 2022ம் ஆண்டில் குற்றவியல் சதியில் ஈடுபட்டதாக கூறுப்பட்ட குற்றச்சாட்டாகும். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பராமரிப்பு(TPR-007) உட்பிரிவு மற்றும் பிற இடங்களுக்கான பணிகள் சுமார் 7 கோடி மதிப்பீட்டில் சங்கரானந்த் இன்பரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன. இதில் எந்தவொரு பணியும் மேற்கொள்ளப்படாத நிலையில், மார்ச் 25 மற்றும் மார்ச் 28 ஆகிய தேதிகளில் ரூ.3.23 கோடி மேற்படி சங்கரானந்த் இன்பரா நிறுவனத்திற்கு விடுவிக்கப்பட்டது. இதன் மூலம் அரசு பணம் ரூ.3.23 கோடி மோசடி மற்றும் குற்றவியல் சதியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தனியார் ஒப்பந்தகாரரான A-11 இடமிருந்து முறையற்ற ஆதாயத்தை பெற்றதன் விளைவாக A-1 முதல் A-10 வரையிலான அரசு ஊழியர்கள் பொதுக் கடமையை நேர்மையற்ற முறையில் செயல்படுத்தியுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக இன்று 25.06.2026 மொத்தம் 20 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன, அவைகள் சென்னையில் 4 இடங்களிலும், திருவண்ணாமலையில் 4 இடங்களிலும், கரூரில் 7 இடங்களிலும், திண்டுக்கல்லில் 2 இடங்களிலும், கோயமுத்துாரில் 2 இடங்களிலும், திருப்பூரில் 1 இடத்திலும் நடத்தப்பட்டன. இந்த சோதனையில் முன்னாள் அமைச்சர் திரு.எ.வ.வேலு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் ஒப்பந்தகாரரின் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் முக்கியமான ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் வழக்கிற்கு தொடர்புள்ள நெடுஞ்சாலைதுறை ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.40 இலட்சம் கைப்பற்றப்பட்டன. வழக்கு விசாரணையில் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 7:18 pm
Posted By : ADMIN
எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?