Date : 26 June 2026, 7:01 pm
Posted By : ADMIN

இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - News7 Tamil

இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - News7 Tamil

சுமார் 0.9 கி.மீ உயரத்தில் தமிழக கடலோர பகுதிகளின் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. “ஆட்டோ இம்யூன்(Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்” – நடிகர் விஷ்ணு விஷால்! இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? என்எல்சி நிறுவன பங்குகள் விற்பனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – பிரதமருக்கு, முதலமைச்சர் விஜய் கடிதம்! “குற்றங்களைக் கட்டுக்குள் கொண்டு வரத் தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!