Date : 26 June 2026, 6:54 pm
Posted By : ADMIN

’தர்மன்’ படத்தின் ஸ்டைலிஷான ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோ - இணையத்தில் வைரல்

’தர்மன்’ படத்தின் ஸ்டைலிஷான ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோ - இணையத்தில் வைரல்

சென்னை: ’தர்மன்’ பட ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படத்திற்கு ‘தர்மன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில், இன்று அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த மேக்கிங் வீடியோவில் ரஜினிகாந்த் கெட்டப்பிற்கு ஏற்றாற்போல் உடைகள், கழுத்தில் அணியும் செயின், கடிகாரங்கள் உள்ளிட்ட காஸ்டியூம்கள் தேர்வு செய்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களில் முக்கியமாக அவர் அணிந்திருந்த ருட்ராட்சமும், இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் அணிந்துள்ளார். மேலும் கடவுள் முருகன் வேல் பொறித்தது போன்ற காப்பும் காஸ்டியூம்களுக்கு தேர்வு செய்யப்படுகிறது. இதேபோன்ற காட்சி, நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தின் ஃபர்ஸ்க் லுக் மேக்கிங் வீடியோவிலும் இடம்பெற்றிருந்தது. தர்மன் பட போஸ்டரில் ரஜினிகாந்த் அணிந்திருக்கும் வாட்சில் 12.12 என்று நேரம் காட்டுகிறது. இது அவரது பிறந்தநாள் தேதியாகும். தொடர்ந்து இப்படத்தின் மேக்கிங் வீடியோவில், அஷ்வத் மாரிமுத்து, ரஜினிகாந்த் நிற்க வேண்டிய போஸை செய்து காட்டுகிறார். இறுதியில் ரஜினிகாந்த் போஸ்டரில் இருப்பது போன்ற போஸில் நிற்கிறார். அப்போது, அவரது பிரபல வசனமான ‘கெட்ட பையன் சார்’ பின்னணியில் இடம்பெறுகிறது. ரஜினிகாந்தின் 173வது படமான தர்மன் திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இதுவரை அஷ்வத் மாரிமுத்து படங்களுக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து வந்த நிலையில், முதல்முறையாக அவர் அனிருத்துடன் இணைந்துள்ளார். தர்மன் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இப்படம் குறித்து பேசியபோது, இக்கதை ரஜினிகாந்தின் மாஸ் கமர்ஷியலுடன், என்னுடைய நல்ல மெசேஜும் கொண்டதாக இருக்கும் என கூறினார். முன்னதாக அஷ்வத் மாரிமுத்து அசோக் செல்வன், பிரதீப் ரங்கநாதன் போன்ற இளம் நடிகர்களுடன் பயணித்த நிலையில், அவர் மூன்றாவது படத்திலேயே சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தை இயக்குகிறார். இவர்களது கூட்டணியில் உருவாகும் படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.