Date : 26 June 2026, 6:26 pm
Posted By : ADMIN

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும்: பாகிஸ்தான்

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும்: பாகிஸ்தான்

அமெரிக்கா, ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ​​பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (நடுவில்), அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (இடதுபுறம்) மற்றும் கத்தாரின் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்-தானி (வலது) - கோப்புப் படம் ஈரான் - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும் என்று பாகிஸ்தான் வியாழக்கிழமை (ஜூன் 25) தெரிவித்துள்ளது. ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போரால், எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு பொருளாதார பிரச்னைகளை உலகின் பலநாடுகள் எதிர்கொண்டது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்பட்டது. இதைத் தொடர்ந்து, ஈரானின் அணு ஆயுதக் கொள்கை கைவிடல், ஹோர்முஸ் நீரிணை திறப்பு என பல்வேறு கோரிக்கைகள் அமெரிக்காவால் வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் பேச்சுவார்த்தை முடிவுபெற்று பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் சுவிட்சர்லாந்தில் இரு நாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் ஹொர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் ஈரான் - அமெரிக்கா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை பாதித்தன. இதுகுறித்து பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தாஹிர் அன்ட்ராபி தெரிவித்ததாவது: பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. அடுத்த வாரம், அநேகமாக வரும் செவ்வாய்க்கிழமை அன்று பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்று நான் நம்புகிறேன். தற்போது உள்ள ஒரு இடைவெளி சாதாரணமானதுதான். பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்பட்டது போன்றதல்ல. அடுத்த வாரம் பேச்சுவார்த்தை தொடங்கும்போது, எங்கள் தூதுக்குழுவும் அங்கு இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.