கொலையானவர் - குற்றஞ்சாட்டப்பட்டோர் - ENS மகாராஷ்டிர மாநிலம் புணேவில் பணக்கார இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வாலைக் கொலை செய்வது குறித்து அவரது வருங்கால மனைவி, தன்னுடைய காதலனிடம் 2000க்கும் அதிகமான முறை போனில் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேத்தன் அகர்வால் கொலையை விசாரித்து வரும் காவல்துறை, கொலை செய்த குற்றவாளி தம்பதி, கடந்த 6 மாதத்தில் மட்டும் இரண்டாயிரம் முறைக்கும் மேல், ஏற்கனவே கொலை முயற்சி தோல்வியடைந்ததால், அடுத்து எப்படி கொலை செய்ப்போகிறோம் என்பது குறித்து செல்போனில் பேசியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். குற்றவாளிகள் சியா கோயல் - காதலன் சேத்தன் சௌத்ரி இருவரும் இதுவரை 2000 போன் கால்களை செய்திருக்கிறார்கள். சரியாக 238 மணி நேரம் இவர்கள் பேசிய பதிவுகள் 25 வயதாகும் புணேவைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வாலை கொலை செய்வது குறித்து திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த உரையாடல் பதிவுகள் மூலம், இருவரும் கேத்தனை இரற்கு முன்பே இரண்டு முறை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் அது தோல்வியடைந்திருக்கிறது. மூன்றாவது முயற்சியில் கேத்தன் கொலை செய்யப்பட்டுவிட்டார். இப்போது சியா - சேட்டன் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறார்கள். ஜூன் 18ஆம் தேதி லோஹாகட் கோட்டைக்குச் சென்றபோது, 400 அடி பள்ளத்தில் தள்ளி கேத்தன் அகர்வால் கொலை செய்யப்பட்டார். முதலில் இது விபத்து என்றே கருதப்பட்டது. முதற்கட்ட விசாரணை, சிசிடிவி காட்சிகள், போன் அழைப்புகள் போன்றவற்றை ஆராய்ந்த போதுதான் இது திட்டமிட்டக் கொலை என்று தெரிய வந்தது. சியா, சேத்தன் இருவரும் கைது செய்யப்பட்டனர். முதலில், சியா - சேத்தன் இருவருக்கும் இடையேயான எண்ணற்ற போன் கால்கள்தான் இவர்கள் மீது சந்தேகம் வர முதல் காரணம். ஜனவரி முதல் இவர்கள் 2000 முறை போனில் பேசியிருக்கிறார்கள. அதில்லாமல், சம்பவத்தன்று, கடுமையான வெய்யில் பகுதிக்கு, சேத்தன் ஹூடி அணிந்துகொண்டு முகத்தை மறைக்கும்படி வந்ததும் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கொலை செய்வதற்கு முன்பு, சியா - சேத்தன் இருவரும் இந்தக் கோட்டைக்கு பல முறை வந்து சென்றிருக்கிறார்கள். சம்பவத்தின்போது சேத்தன், தன்னைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக, தன்னுடைய செல்போனை அறையிலேயே வைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த லோஹாகட் மலையேற்றத்திற்கு இருவரும் சென்றிருக்கிறார்கள். அப்போது கேத்தனை சியா கீழே தள்ளியிருக்கிறார். எப்படியோ கேத்தன் தப்பித்து வந்துள்ளார். ஆனால், ஒரு பாம்பிடமிருந்து அவரைக் காப்பாற்றவே அவ்வாறு செய்ததாக சியா கூறியது குடும்பத்தாருக்கு இப்போது நினைவு வந்தது. அதுபோலவே பாலி செல்ல திட்டமிட்டு, அந்தப் பயணம் கைவிடப்பட்டதால், மீண்டும் லோஹாகட் மலையேற்றத்திற்குச் செல்ல சியாதான் பிடிவாதம் பிடித்து அழைத்துச் சென்றிருக்கிறார். விபத்து வழக்கு கொலை வழக்காக மாறியது எப்படி? அதிகப்படியான போன் அழைப்புகள், சியாவின் நடவடிக்கைகள், சிசிடிவி காட்சிகள், குற்றவாளி அணிந்திருந்த ஹூடி போன்றவைதான், விபத்தால் மரணம் என்று பதிவான வழக்கை கொலை வழக்காக மாற்றுவதற்கு அடிப்படைக் காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 6:13 pm
Posted By : ADMIN
சிக்க வைத்த 238 மணி நேர போன் பேச்சு, சிசிடிவி காட்சி! புணே கொலையில் காதலனுடன் சிக்கிய இளம்பெண்ணின் சூப்பர் பிளான்!