சிலிண்டர் முதல் ஆதார் வரை - கோப்புப்படம் நாடு முழுவதும் வருகின்ற ஜூலை 1 முதல் சிலிண்டர் விலை, ஆதார் அட்டை திருத்த விதிகள், ரயில் அபராதம் உயர்வு என பல்வேறு மாற்றங்கள் ஏற்படவுள்ளன. ஒவ்வொரு மாதமும் முதலாம் நாள் மக்கள் அன்றாட பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களான சிலிண்டர், பெட்ரோல், எல்பிஜி விலை தொடங்கி பல்வேறு மாற்றங்கள் நிகழ்வது வழக்கமாக மாறியுள்ளது. இதேபோன்று, வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் பல்வேறு மாற்றங்கள் நிகழவுள்ளன. அவற்றை காணலாம். அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல்களுக்குப் பிறகு, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறிப்பிடத்தக்க ஏற்றத்தையும், முன்பதிவு முறையில் மாற்றத்தையும் கண்டது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 3,283 வரை உயர்ந்துள்ளது. முன்பதிவுக்கான இடைவெளி நகரங்களுக்கு 25 நாள்களாகவும், கிராமங்களுக்கு 45 நாள்களாகவும் உயர்ந்தப்பட்டன. இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கும் சூழலில், ஜூலை மாதம் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல், மத்திய அரசின் 'ஒரு வீட்டுக்கு ஒரு எரிவாயு இணைப்பு' (அதாவது 'இரட்டை இணைப்பு கூடாது') என்ற கொள்கை அமல்படுத்தப்படவுள்ளது. வீட்டுக்கு நேரடியாக குழாய் மூலம் எரிவாயு இணைப்பைப் பெற்றவர்கள் 30 நாள்களுக்குள் எல்பிஜி சிலிண்டரை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்படைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், எல்பிஜி சிலிண்டர் மட்டும் வைத்திருப்பவர்களுக்கு விரைவில் சிலிண்டர் டெலிவரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் முன்பதிவுக்கான இடைவெளி குறைக்கப்படும் எனத் தெரிகிறது. ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆதார் தளத்தில் இலவசமாக மின்னஞ்சல் முகவரியை புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31, 2026 வரை 6 மாத காலம் இலவசமாக இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இதன்மூலம் மின்னஞ்சல் முகவரிகளை திருத்தம் செய்ய நேரடியாக ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல தேவையில்லை. வீட்டிலிருந்து ஆதார் தளத்தில் வாடிக்கையாளர்களே திருத்திக் கொள்ளலாம். ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்தால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. புறநகா் மின்சார ரயில்களில் ரூ. 10 பயணச் சீட்டு எடுக்காமல் வருவோருக்கு ரூ. 250 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு ரயில்களில் ரூ. 600 மதிப்புள்ள பயணச் சீட்டு பெறாமல் பயணிப்போருக்கு ரூ. 1,620 வரை அபராதம் இருமடங்காக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. ரயில் நிலைய வளாகத்தில் புகைப் பிடித்தால் ரூ. 100-க்கு பதிலாக ரூ. 2,000 அபராதம், பெண்கள் பெட்டியில் பயணிக்கும் ஆண்களுக்கு ரூ. 500-க்கு பதிலாக ரூ. 2,500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 6:12 pm
Posted By : ADMIN
சிலிண்டர் முதல் ஆதார் வரை..! ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!