அண்ணா திமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுக்க முனைந்தது உண்மையாக இருக்குமானால் அதைவிட அரசியல் மோசடி ஒன்று இருக்க முடியாது - மதுரையில் வைகோ பேட்டி. மதுரையில் வைகோ செய்தியாளர் சந்திப்பு மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள திருமண மஹாலில் மதிமுக கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...," முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர் விழாவிற்கு வருவார்களா. வருவார்கள் என எதிர்பார்க்கிறேன். அது அவர்கள் முடிவு. விஜயின் சட்டமன்ற பேச்சு மற்றும் செய்கை குறித்த கேள்விக்கு, சில மாதங்களில் அவர் கற்று தேர்வார். தெளிவு பெற்றுவிடுவார் என் நான் நம்புகிறேன். சட்டமன்றத்தில் அப்பாவை காணோம் என பேசியது மற்றும் விமர்சனம் குறித்த கேள்விக்கு, எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவது அதைப்பற்றி நான் கமெண்ட் அடிக்க முடியுமா. அதைப் போலத்தான் அவர் பேசுவதையும் கமெண்ட் செய்ய விரும்பவில்லை. கருவேல மரம் வெட்டும் பணி குறித்த கேள்விக்கு மக்கள் நலனுக்காக கருவேலமரங்களை அகற்றுகிறோம். ஓட்டு கிடைக்காத ஒரு வேலையில் ஈடுபட்டு ஒரு ஓட்டு கூட அதனால் கிடைக்காது. ஆனாலும் தமிழ்நாட்டின் நலனுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அந்த வேலையை செய்கிறேன். தமிழ்நாட்டு வாழ்வாதார கடமைகளில் எல்லா கட்சிகளையும் விட முன்னணியில் நிற்பது மதிமுக தான். ஆ.ராசா விமர்சனம் குறித்த கேள்விக்கு, ஒவ்வொருக்கும் ஒவ்வொரு பாணி உள்ளது. ஆ.ராசாவின் பாணி அது. என்னுடைய பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன பல வருடங்களாக. அது தொடர்ந்து கொண்டே இருக்கும். விலகி விட்டேன் என்று சொல்பவர்கள், மந்திரி சபையில் சேர்ந்து விட்டேன் என்று சொல்பவர்கள். ஆனால் திமுகவில் இருக்கிறோம் என்று சொல்பவர்கள் எனக்கு ஒன்றுமே புரியவே மாட்டேங்குது. அந்த நிலைப்பாடு அபூர்வமாக இருக்க முடியும். அதைப்பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அண்ணா திமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுக்க முனைந்தது உண்மையாக இருக்குமானால் அதைவிட அரசியல் மோசடி ஒன்று இருக்க முடியாது.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 6:01 pm
Posted By : ADMIN
அதிமுக ஆட்சிக்கு திமுக ஆதரவா? இதைவிட அரசியல் மோசடி இல்லை - வைகோ ஆவேசம்!