மும்பை புறநகர் ரயிலில் பயணிகள் கண் முன்னே, 21 வயது இளைஞர் கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்றிரவு சர்ச்கேட் முதல் நல்லசோபாரா வரையிலான அதிவேக புறநகர் ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் லோஹர் என்ற இளைஞர் பயணம் செய்து கொண்டிருந்தார். அதே ரயில் பெட்டியில் ஒருவர் கதவின் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது வெளியே மழை பெய்துகொண்டிருந்ததால், மழைத் துளிகள் உள்ளே வருகிறது கதவை மூடுமாறு அவரிடம் மற்ற பயணிகள் கூறினர். ஆனாலும் அந்த நபர் கதவை மூடவில்லை. அப்போது அவருக்கும் அந்த இளைஞருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த நபர் தனது பையிலிருந்து பெரிய காத்தியொன்றை எடுத்து, அந்த இளைஞரை சரமாரியாகக் குத்தினார். மற்ற பயணிகள் அனைவரும் அவரைத் தடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். மறுபக்கம் அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே இறந்தார். மேலும், கொலை செய்த நபர் தப்பியோடிவிட்டார். இச்சம்பம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஇருக்கும் நிலையில், கொலையாளியைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதேவேளையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரயிலில் பயணிகளுக்கான பாதுகாப்பு எங்கே? ரயில்வே போலீஸ் என்ன தான் செய்கிறது எனப் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 5:52 pm
Posted By : ADMIN
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ