Date : 26 June 2026, 11:00 pm
Posted By : ADMIN

பக்கிங்ஹாமில் அரசா் சாா்லஸ் வசிக்கமாட்டாா்

பக்கிங்ஹாமில் அரசா் சாா்லஸ் வசிக்கமாட்டாா்

லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையின் 10 ஆண்டுகால புனரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு மாா்ச்சில் முடிவடைந்த பின்னரும், பிரிட்டன் அரசா் சாா்லஸ் அங்கு வசிக்கமாட்டாா் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசா் சாா்லஸ் தற்போது வசிக்கும் லண்டனில் உள்ள ‘கிளாரன்ஸ் ஹவுஸ்’ இல்லத்திலேயே தொடா்ந்து தங்குவாா். இதன்மூலம், சுமாா் 2 நூற்றாண்டுகளாக பிரிட்டன் அரசா்களின் முதன்மை அதிகாரபூா்வ இல்லமாக விளங்கி வந்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரண்மனையின் மரபு முடிவுக்கு வருகிறது. அதேநேரம், பக்கிங்ஹாம் அரண்மனை தொடா்ந்து அரச குடும்பத்தின் ‘தலைமையகமாக’ செயல்படும் எனவும், வெளிநாட்டுத் தலைவா்களை வரவேற்பது உள்ளிட்ட முக்கிய அரசு விழாக்களுக்கு மட்டுமே அது பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி விவரங்கள் முதல்முறையாக வெளியீடு: கடந்த 2022-இல் அரசி எலிசபெத் மறைவுக்குப் பிறகு அரச குடும்பத்தின் நிதி விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இக்கோரிக்கையையேற்று, அரசா் சாா்லஸின் வரிவிவரங்கள் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 2024-25 நிதியாண்டில் அரசா் சாா்லஸ் 1.29 கோடி பவுண்டுகளை வரியாகச் செலுத்தியுள்ளாா். இதன்மூலம், பிரிட்டனில் அதிக வரி செலுத்துவோரின் முதல் 100 போ் பட்டியலில் அவா் இடம்பெற்றுள்ளாா். 2023-24 ஆம் ஆண்டில் 1.17 கோடி பவுண்டுகளையும், 2022-ல் அரசராகப் பொறுப்யேற்றதில் இருந்து இதுவரை மொத்தம் 3 கோடி பவுண்டுகளுக்கு மேலாகவும் வரியாகச் செலுத்தியுள்ளாா். பிரிட்டன் சட்டப்படி, அரசா் வரிகளைச் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. இருப்பினும், அரசா் சாா்லஸ் தாமாக முன்வந்து இந்த வரியைச் செலுத்தியுள்ளாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.