வெள்ளக்கோவில் அருகே 1.700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வெள்ளக்கோவிலை அருகே தீத்தாம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் அப்பகுதியில் திடீா் சோதனை மேற்கொண்டாா். அப்போது தீத்தாம்பாளையம், முத்து நகா் காட்டுப் பகுதியில் அதே ஊரைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் லிகித் (18) என்பவரிடம் இருந்து 1.700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னா் அவா் கைது செய்யப்பட்டு, காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 10:48 pm
Posted By : ADMIN
வெள்ளக்கோவிலில் 1.700 கிலோ கஞ்சா பறிமுதல்