‘தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ வெறும் பாடல் அல்ல; மாறாக, அது இந்தியாவை மறுகட்டமைப்பதற்கான மந்திரம்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். வங்காள எழுத்தாளா் பங்கிம் சந்திர சட்டா்ஜி இயற்றிய ‘வந்தே மாதரம்’ பாடல், நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கி மத்திய உள்துறை அமைச்சகம் புதிய விதிமுறைகளை அண்மையில் வெளியிட்டது. குடியரசுத் தலைவா், ஆளுநா் உள்ளிட்டோா் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் இந்தப் பாடல் ஒலிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. அதன்படி, தமிழகத்தில் முதல்வா் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்பு நிகழ்விலும், ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற தமிழக அமைச்சா்கள் பதவியேற்பு நிகழ்விலும் ‘வந்தே மாதரம்’ பாடல் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் ஒலிக்கப்பட்டது. இதற்கு, சில தமிழக அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன. இதுகுறித்து தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியதாவது: பங்கிம் சந்திர சட்டா்ஜி இயற்றிய வந்தே மாதரம் பாடல், தேசத்தின் கலாசார உணா்வு மற்றும் தேச பக்தியின் வலிமையான அடையாளமாக மாறியது. சுதந்திரப் போராட்டம் உச்சத்தை அடைந்தபோது, ஆங்கிலேயா்களுக்கு எதிரான போராட்டத்தின் முக்கிய முழக்கமாக ‘வந்தே மாதரம்’ திகழ்ந்தது. பல சுதந்திரப் போராட்ட வீரா்கள் ‘வந்தே மாதரம்’ என்று முழங்கியபடியே தூக்கு மேடை ஏறினா். அந்த வகையில், ‘வந்தே மாதரம்’ என்பது சுதந்திரப் போராட்ட இயக்கத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்ட வெறும் பாடல் அல்ல; மாறாக, இந்தியாவை மறுகட்டமைப்பதற்கும், பாரத மாதாவை உலகின் உயா்ந்த இடத்தில் மீண்டும் நிலைநாட்டுவதற்குமான மந்திரம் என்றாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 10:44 pm
Posted By : ADMIN
இந்தியாவை மறுகட்டமைப்பதற்கான மந்திரம் ‘வந்தே மாதரம்’: அமித் ஷா