நல்லாம்பட்டி தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி யின் 9ஆம் ஆண்டு துவக்க விழா

நல்லாம்பட்டி தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி யின் 9ஆம் ஆண்டு துவக்க விழா

நல்லாம்பட்டி தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி யின் 9ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்ட அளவிலான மல்லர்கம்பம் போட்டி நடைபெற்றது.... 100 கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.. போட்டிக்கு வருகை தந்த அனைவரையும் கவியரசி , பாஸ்கர் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்... இப்போட்டியினை நேரு யுவ கேந்திராவின் முன்னாள் கணக்கு மற்றும் திட்ட மேற்பார்வையாளர் திரு.வேல்முருகன் துவங்கி வைத்தார்.... தருமபுரி மாவட்ட மல்லர்கம்ப சங்க கௌரவ தலைவர் திரு .மா.பழனி அவர்கள், தலைவர் சுரேஷ் அவர்களும் தலைமை வகித்தனர்..போட்டிக்கு கல்வெட்டு ஆர்வலர் திரு.பல்வேல் திரையன் அவர்கள் முன்னிலை வகித்தார்.. அகில இந்திய வானொலி தருமபுரி நிலைய இயக்குநர் திரு.கோபாலகிருஷ்ண அவர்கள் ,உடற்கல்வி ஆசிரியர்கள் குப்பாகவுண்டர், குழந்தைவேல், நல்லாம்பட்டி ஊர்கவுண்டர், திரு.முனிராஜ்,மந்திரி கவுண்டர் துரை.முருகவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்கள்.. இறுதியாக தருமபுரி மாவட்ட மல்லர்கம்பம் சங்க செயலாளர் திரு.சண்முகம் நன்றி கூறினார்...

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%