பேராவூரணி அரசு மற்றும் அறிவியல் கல்லூரியில் பாலின உளவியல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு

பேராவூரணி அரசு மற்றும் அறிவியல் கல்லூரியில் பாலின உளவியல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்வுக்கு,கல்லூரி முதல்வர் முனைவர் சி.இராணி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, பேராவூரணி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவர் சினேகா பிரியதர்ஷினி கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். பாலின உளவியலை பற்றிய முக்கிய அம்சங்களையும், பாலினம் எப்படி தனிநபர்களைப் பாதிக்கிறது என்பதையும், சமூகத்தில் அது எப்படிப் பிரதிபலிக்கிறது என்பதையும்,சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். நிகழ்வில், தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் ஜெ.உமா வரவேற்றார்.கணினி அறிவியல் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் சோ.ஐமுனா நன்றி கூறினார்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?