மயிலாடுதுறையில் கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

மயிலாடுதுறை,செப், 07 - மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா யூனியன் கிளப் அரங்கில் நடைபெற்றது. கிங்ஸ் ரோட்டரி சங்க தலைவர் அய்யாசாமி தலைமை வகித்தார். சங்க பொது செயலாளர் குலசேகரன் முன்னிலை வகித்தார். மதுரை ஆதீனப் புலவரும், தருமையாதீன சைவ சித்தாந்த பேராசிரியருமான முனைவர் கருணா.சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார்.
விழாவில், புத்தகரம் எழில்மணி உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மாணிக்கம், வடவஞ்சாறு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியை ஆக்னஸ் குளோரி எலிசபெத், டி.பி.டி.ஆர்.தேசிய மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கண்ணன், மேலமருதாந்தநல்லூர் கலைவாணர் உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் வைத்தியநாதன், மயிலாடுதுறை காஞ்சி ஶ்ரீசங்கர வித்யாலயா பள்ளி ஆசிரியர் ரெத்தினவேல் ஆகியோரின் தன்னிகரற்ற ஆசிரியர் பணியினை பாராட்டி அவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் “நேஷன் பில்டர் விருது” வழங்கி பாராட்டப்பட்டது.
ரோட்டரி சங்க நிர்வாகிகள் இளவழுதி, ஞானசெல்வம், பாண்டியன், வேலவிநாயகம், வெங்கடேஷ்குமார் ஆகியோர்
விருது பெற்ற ஆசிரியர்களின் பணிகளையும், சாதனைகளையும் பாராட்டி அறிமுகப்படுத்தினர்.
விழாவில் மாற்றுத்திறனாளி திருமுருகன் என்பவருக்கு செயற்கை கால் பொருத்துவதற்காக நிதியுதவி வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க இயக்குநர் அகஸ்டின் விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பொது செயலாளர் குலசேகரன் நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?