மருத்துவத் துணைப் படிப்புகளுக்கு நீட் தேர்வைத் திணிப்பதா? மாணவர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
Feb 02 2026
76
விழுப்புரம், ஜன.
- மருத்துவத் துணைப் படிப்புகளிலும் (Para Medical) நீட் தேர்வைத் திணிக்கும் ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து, விழுப்புரத்தில் சனிக்கிழமை (ஜன.31) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் நாகை மு.இளமாறன் இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மு.ஜீவானந்தம், முற்போக்கு மாணவர் கழக வி.அகத்தியன், சமூக நீதி மாணவர் கழக மண்டலப் பொறுப்பாளர் ஒசாமா, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநிலச் செயற்குழு உறுப்பினர் பால்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டித்து உரையாற்றினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?