வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 14.08.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 14.08.25


அன்புடையீர் 


வணக்கம் 14.8. 25 இன்றைய தமிழ்நாடு இ பேப்பர். காம் முதல் பக்கத்தில் ஐநா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அடுத்த மாதம் நம் பிரதமர் மோடிஜி அவர்கள் அமெரிக்க செல்கிறார் என்ற செய்தியை படித்து தெரிந்து கொண்டேன். இன்றைய பஞ்சாங்கம் மிக நல்ல நாளாக அமைய எனக்கு உதவியது மனம் நிறைந்த பாராட்டுக்கள் .


திருக்குறளை அருமையாக பொருளுடன் படித்து மகிழ்ந்தேன். காட்பாடி கழிஞ்சூர் செல்வ விநாயகர் ஆலயத்தில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா கோலாக்கலமாக கொண்டாடப்பட்டது மிகவும் அருமை பாராட்டுக்கள்.


உலர் பழங்கள் சாப்பிடுவதால் நம் உடம்பு இரும்பு போல உறுதியாக இருக்கும் என்று நலம் தரும் மருத்துவ பகுதியில் இதை எப்படி பொடியாக்குவது என்று அருமையான தகவல் சொன்னது பாராட்டுக்கு உள்ளது.


திருப்பூர் அரசு கல்லூரி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் போதை விழிப்புணர்வு கொடுப்பது மிகவும் அருமை. இதனால் விழிப்புணர்வு ஏற்பட்டு போதை இல்லா ஒரு நாடு உண்டாகும்.


சுதந்திர தினம் கொண்டாடவர்க்கும் இந்த நேரத்தில் தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் வரலாறு படித்தவுடன் ஒரு சுதந்திர காற்றை சுவாசித்த பாசமும் நேசமும் உண்டானது.


பசுவை களஞ்சியம் பகுதி நாளுக்கு நாள் மிக அருமையான தகவல்களை மிக அழகாகவும் தெளிவாகவும் கொடுப்பது பாராட்டுக்குரியது வாங்க சம்பாதிக்கலாம் என்று உத்வேகத்துடன் தொடங்க உதவும் தங்களின் முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .


அருமையான ஆன்மிக தகவல்களுடன் அரசியல் தகவல்கள் மிகத் துல்லியமாக சொல்லும் பதினாறாம் பக்கத்திற்கு ஈடு இணையே இல்லை. அனைத்து செய்திகளும் மிகவும் அருமை. கடவுள் படங்கள் பார்ப்பதற்கு கண்ணுக்கு விருந்தாக இருந்தது.


சுற்றுலா பக்கத்தில் வந்த சென்னையில் உள்ள 10 சிறந்த கடற்கரர்களை பட்டியலிட்டு சொன்னது மிகவும் அருமை. பலமுறை பார்த்து இருந்தாலும் புதிதாக படிப்பது போல ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.


மாணவர்கள் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று விழுப்புரம் டிஐஜி உமா அவர்கள் அறிவுரை சொன்னது மிகவும் உண்மை. அதனால் நல்ல சமூகம் அமைந்து நாடு சுபிட்சமாக இருக்கும்.


திருமலைக்கு செல்வதற்கு இனி Fasttag கட்டாயம் என்று ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் அமல் அமலுக்கு வரும் செய்தியை சொன்னது பயணம் செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.


இந்தியா பாகிஸ்தான் நாடுகளுடன் எங்கள் உறவு மிக நன்றாக உள்ளது என்று அமெரிக்கா கருத்து தெரிவிப்பது புதிய தகவலாக எண்ணி படிக்க வைத்தது. சீனப் பொருட்கள் மீது 145% வரி விதிப்பு மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் அறிவித்த அயல்நாட்டு செய்தியையும் படித்து தெரிந்து கொள்ள முடிந்தது.


வியப்பில்லாமல் கிழக்கில் உதிக்கும் சூரியன் போல விப்பில்லாமல் தினமும் காலையில் என் கைகளில் தவழும் தமிழ்நாடு இ பேப்பர். காமின் அனைத்து செய்திகளும் மிகவும் அற்புதம். இதை மிக அக்கறையுடன் தயாரிக்கும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%