
இன்று குடியரசு துணைத் தலைவர்
தேர்தல் நடைபெறுகிறது.
சிபி ராதாகிருஷ்ணன் தான்
துணைத் தலைவர் அதில் என்ன
சந்தேகம். பிரான்ஸ் அரசு
கவிழ்ந்தது. முதலமைச்சரின்
வெளிநாட்டு பயணம் தோல்வி
அடைந்தது என பழனிச்சாமி
குற்றச்சாட்டு. டிஜிட்டல் வன்முறை
மூலம் 85% பெண்கள் பாதிப்பு.
மதிமுகவில் இருந்து மல்லை சத்தியா
நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டு
இருக்கிறார்.
ஏழாம் நூற்றாண்டு சந்திர கிரகண
கல்வெட்டு கண்டுபிடிப்பு.
புற்று நோயை தவிர்க்கக்கூடிய
எண்ணெய் வகைகள் கட்டுரை
நல்ல பயன் உள்ளது.ஆன்மீக
செய்திகள் அனைத்தும் சூப்பர்
ரகம். இலங்கையில் நீண்ட காலம்
தங்க விண்ணப்பிக்க முடியாது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு
கடன் வழங்குவது நிறுத்தம்
செய்யப்பட்டுள்ளது. அதிமுக
கட்சி ஆம்புலன்ஸில் செல்ல வேண்டிய
நிலைமை வரும். உதயநிதி
கூறியுள்ளார். போக்குவரத்து
விதியை மீறியதற்கு கர்நாடக
முதல்வர் அபராதம் கட்டினார்.
ஆதாரை செல்லத்தக்க ஆதாரமாக
மாற்ற வேண்டும். ரஷ்யாவிடம்
இருந்து எண்ணெய் வாங்கும்
நாடுகளுக்கு கூடுதல் வரி
விதிக்கப்படும் என டிரம்ப்
அறிவிப்பு. அன்றாடம் புதுப்புது
செய்திகளை வண்ணமயமாக
வெளியிடுவதில் தமிழ்நாடு இ பேப்பர்
முன்னிலை வகிக்கிறது.
குறிப்பிட்ட சிலர் மட்டுமே
தமிழ்நாடு இ பேப்பர்
முன்னேற்றத்திற்கு பாடுபட்டு
வருவதாக தெரிகிறது.
ஊர் கூடி தேர் இழுத்தால் தான்
தேர் நிலைக்கு வரும். அதுபோன்று
நாம் அனைவரும் ஒன்றிணைந்து
செயல்பட்டால் தான் வாசகர்
எண்ணிக்கையும் கூடும்.
தெய்வம் இதழையும் நேரடியாக
கொண்டு சேர்க்க முடியும்.
ஆன்மீகம் ஒன்றே குறிக்கோளாக
கொண்டால் இவை அனைத்தும்
சாத்தியமே. இரண்டு கைகளும்
சேர்ந்தால்தான் ஓசை வரும்
தன்னலம் கருதாது உழைத்து வரும்
தமிழ்நாடு இ பேப்பர்
குடும்பத்தினருக்கு மனமார்ந்த
வாழ்த்துக்கள்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?