
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில்
சி.பி ராதாகிருஷ்ணன் வெற்றி.
எதிர்பார்த்த ஒன்றுதான்.
நேபாளத்தில் நாடாளுமன்றம்
தீவைக்கப்பட்டது. உள்ளூர் செய்திகள்
அனைத்தும் அருமையாக
தொகுக்கப்பட்டுள்ளது. சர்க்கரை
நோய்க்கு உண்ண வேண்டிய
உணவுகள் பற்றிய செய்தி நல்ல
விழிப்புணர்வு பகுதியாகும்.
கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம்
சீரமைக்கப்பட்டது. மதுரையில்
ஆவணி திருவிழா சிறப்பாக
நடைபெற்றது. தெய்வத்திடம்
நாம் என்ன பிரார்த்தனை செய்ய
வேண்டும் என்ற கட்டுரை
நல்ல தகவல் அமைந்துள்ளதாக
இருந்தது. வேலூர் முத்து ஆனந்த்
அவர்களின் கவிதைகள் அனைத்தும்
சூப்பர் ரகம். பாளை கணபதி
தென்காசி வெங்கடாசலபதி
நெல்லை குரலோன் போன்றவர்கள்
தெய்வம் இதழுக்காகவும்
தமிழ்நாடு இ பேப்பர் காகவும்
அதன் முன்னேற்றத்திற்காகவும்
பாடுபடுவது மிக்க மகிழ்ச்சி
அளிக்கிறது. அவர்களுக்கு
சிறப்பு வாழ்த்துக்கள்.
ஹரி கோபி ஜோக்ஸ் அருமையாக
இருந்தது. பொது அறிவு பூங்கா
சிறப்பான பகுதி ஆகும்.
சனிக்கிழமை மட்டுமே மக்களை
சந்திப்பேன் என விஜய் கூறுவது
அபத்தமானது. மாமல்லபுரம்
கடற்கரையில் ஒதுங்கிய
பலிபீடம். எந்தக் கோவிலை
சேர்ந்தது என்று தெரியவில்லை.
வங்கி லாக்கருக்கு புதிய
வழிமுறைகளை ரிசர்வ் வங்கி
அறிவித்துள்ளது. காத்மாண்டு
விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
கெஜ்ரிவால் வெளிநாடு செல்ல
மத்திய அரசு அனுமதி.
கத்தார் மீது இஸ்ரேல் அதிரடி
தாக்குதல் நடத்தியுள்ளது.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
தன்னலம் கருதாமல்
அயராது பாடுபடும் தமிழ்நாடு
இ பேப்பர் குடும்பத்திற்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?