
துணை ஜனாதிபதி தேர்தலில்
சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளர்
ஆக அறிவிப்பு. சோதனைகளை
சாதனைகளாக மாற்ற வேண்டும்
கமல் கல்லூரி நிகழ்ச்சியில்
பரபரப்பு பேட்டி. திங்கள் கிழமை
மாரடைப்பு அதிகம் ஏற்படுவதாக
மருத்துவ துறை அறிக்கை.
பரந்தூர் விமான நிலையத்துக்கு
எதிராக ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
முகில் தினகரன் எழுதிய
தாய் மாமன் கட்டுரை அருமையாக
இருந்தது. முத்து ஆனந்த்
அவர்கள் எழுதிய பழங்கால
கல்யாணங்கள் பற்றிய கட்டுரை
நிறைவாக இருந்தது.
ஆட்டுக்கால் சூப் குடிப்பதால்
ஏற்படும் நன்மை தீமைகள்
கட்டுரை சிறந்த விழிப்புணர்வு
ரத்த கொதிப்பு அதிகமானால்
என்ன நடக்கும் என்ற விளக்கம்
அனைவருக்கும் நல்லது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி
கோவிலில் சமபந்தி விருந்து
நடைபெற்றது. கடலோர காவல் படை
தனுஷ்கோடியில் சுதந்திர தினம்
கொண்டாடினர். தொழில் அதிபரிடம்
60 கோடி மோசடி நடைபெற்று உள்ளது.
ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
வழங்கப்படும் என பீகார் அரசு
அறிவிப்பு. பாகிஸ்தான் வெள்ளத்தில்
சிக்கி 300 பேர் உயிரிழப்பு.
ரஷ்யா இனி இருக்காது என
உக்ரைன் எச்சரிக்கை செய்துள்ளது.
தினசரி ஒரு புது செய்திகளை
உடனுக்குடன் தமிழ்நாடு இ பேப்பர்
வழங்கி வருவது மகிழ்ச்சி
அளிக்கிறது.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?