வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 02.08.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 02.08.25



இந்திய வரி விதிப்புக்கு ஆகஸ்ட் ஏழு


 வரை ஒத்திவைப்பு அமெரிக்கா 


அறிவிப்பு. கூட்டணி ஆட்சி என்ற 


பேச்சுக்கு இடமில்லை என 


வைகோ தெரிவித்துள்ளார். 


தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் 


பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 



சட்டசபை தேர்தலில் திமுகவுடன் 


கூட்டணி வைப்பது பற்றி பிரேமலதா


முடிவு எடுப்பார். அரசு பள்ளிகளில் 


துப்புரவு தொழிலாளர்கள் 


இல்லாததால் மாணவர்களை 


கழிவறைகளை சுத்தம் செய்ய


 வேண்டிய அவல நிலை உள்ளது. 


ஒற்றைத் தலைவலி பற்றி 


கட்டுரையும் அதை தடுக்கும் 


 முறைகளும் அற்புதமாக இருந்தது. 


ரத்த அழுத்தம் நீரழிவு


போன்றவற்றுக்கு வெண்டைக்காய் 


சிறந்த மருந்தாகும். ஜாதி மதத்தால் 


நடக்கும் சண்டைகளை தடுக்க 


தனியாக சட்டம் இயற்ற வேண்டும் 



 என்று திருமாவளவன் கோரிக்கை. 


முதலில் அரசியல் தலைவர்கள் 


வாயை வைத்துக்கொண்டு 


சும்மா இருந்தாலே போதும். 



 பாதி பிரச்சனைகள் தீர்வாகும். 


கனக சபை தரிசனத்திற்கு 


தீஷிதர்கள் அனுமதி மறுப்பு. 


இது ஆண்டுதோறும் வாடிக்கையாக 


நடைபெறுவது தானே. இதில் 


ஆச்சரியப்பட என்ன உள்ளது. 


மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 


மோகன் பகவத் பெயரையும் சேர்க்க 


 வேண்டும். என எதிர் கட்சிகள் 


கோரிக்கை. உடனடியாக 


நிறைவேற்றி விட்டு தான் மறுவேலை

 


பார்ப்பார்கள். குஜராத்தில் 


டிஜிட்டல் மோசடிகள் மூலம் 19 கோடி 


மோசடி நடைபெற்றுள்ளது. 


எதிர்க்கட்சி அமளியால் பார்லிமென்ட் 


ஒத்திவைப்பு. பஸ் பள்ளத்தில் 


விழுந்து பயணிகளை காப்பாற்றிய 


 ஏழு தமிழர்களை சிங்கப்பூர் பிரதமர் 


பாராட்டி விருந்து வைக்கிறார். 


சிங்கப்பூர் என்றால் சிங்கப்பூர் தான். 


ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல்


 பரிசு வழங்க வேண்டும் வெள்ளை 


 மாளிகை அறிக்கை. டிரம்பை


முதலில் அமைதியாக இருக்கச் 


 சொல்லுங்கள். நாள்தோறும் ஏதாவது 


பேசி பிரச்சனைகளை 


பெரிதாக்குவதே வேலையாக கொண்டு 


 உள்ளார். முதலில் அமைதியாக 


இருந்தால்தான் அவருக்கு 


நோபல் பரிசு கொடுப்பதை பற்றி 


பரிசீலனை செய்யலாம்.


அடுத்த தெய்வம் இதழை காண 


ஆவலோடு காத்துக் 


 கொண்டிருக்கிறோம். தெய்வம் 


இதழும் தமிழ்நாடு இ பேப்பரும் 


வாசகர்களை கட்டிப்போட்டு 


வைத்துள்ளது என்று சொன்னால் 


மிக ஆகாது. அனைத்து தமிழ்நாடு 


இ பேப்பர் ஊழியர்கள்


 அனைவருக்கும் நெஞ்சார்ந்த 


வாழ்த்துக்கள்.



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%