
நலம் தரும் மருத்துவம் பகுதியில் நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு முறைகள் பற்றி படித்ததும், பல்லாண்டுகளுக்கு முன் வானொலியில் கேட்ட , "கஞ்சி" என்பது உணவுக்கு இடையே சாப்பிடலாமே தவிர, அதுவே உணவாகக் கூடாது என்றதும்,
கல்கி வார இதழில் "அம்மா- அப்பா" இருவரில் எவரேனும் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு வர 70%. சதவிகித வாய்ப்பு உள்ளது என்றும், இருவருக்குமே அந்நோய் இருந்தால் வாரிசுகளுக்கும் 100% சதவிகிதம் வரும் எனப் படித்ததும் என் நினைவிற்கு வந்தன.
செண்பக ராமன் வரலாறு படித்ததும் அவரது பேரன் உறவு முறையில் உள்ளவர், " அவர்தான்" முதன் முதலில் ஜெய்ஹிந்த் என உச்சரித்து ஜெய்ஹிந்த் செண்பகராமன்" என அழைக்கப்பட்டார் எனச் சொன்னதும் நினைவிற்கு வந்தது.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?