Monday, 29 June 2026, 06:07 PM | TamilnaduePaper
Published On: 2026-06-26 23:28:35 | Reporter: Admin
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும் அதிகாரமும் கொண்ட இந்த உயர் பதவியின் அதிகாரப்பூர்வக் காலம் ஓராண்டு மட்டுமே என்ற போதிலும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நீடிக்கும் வரை இப்பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் இருந்துகொண்டு தமிழக அரசின் முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பதும், மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடமிருந்து முறைப்படிப் பெற்றுத் தருவதுமே இந்தச் சிறப்புப் பிரதிநிதியின் முதன்மையான மற்றும் முக்கியப் பொறுப்பாகும். தமிழக முதல்வர் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்பட்ட ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொறுப்புக்கு தனது படத்தை தயாரித்தவருக்கு விஜய் வழங்கியிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம், வெள்ளி விலை! வெனிசுலா நிலநடுக்கம் – 550க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? “மண்டாடி” படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு!