Tuesday, 30 June 2026, 09:43 PM | TamilnaduePaper
Published On: 2026-06-26 21:40:46 | Reporter: Admin
சென்னை: 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக சவரனுக்கு ரூ. 1,680 குறைந்த நிலையில் இன்று ரூ. 640 அதிகரித்திருக்கிறது. சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு உயர்வால் முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டுகிற முதலீடுகளின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் நிரந்தர மற்றும் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிற தங்கத்தின் விலை சர்வதேச அளவில் குறைந்திருக்கிறது. இந்த தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார சிக்கல்கள், சுங்க வரி அதிகரிப்பு, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவீனம் போன்ற பல்வேறு காரணங்கள் தங்க விலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் நமது நாட்டிலும் தங்கத்தின் விலையானது கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும், இந்த விலை சரிவானது நிரந்தரமில்லை என்றும், விரைவில் விலை மீண்டும் ஏற்றம் காணும் என்றும் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆபரண தங்கத்தின் விலையானது நேற்று (ஜூன் 25) கிராமுக்கு ரூ. 210 குறைந்து ரூ. 13,140-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 80 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து ரூ. 1,05,120-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 640 அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,05,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 3,360 குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்திருக்கிறது. வெள்ளி விலையானது நேற்று கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 230க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 5 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று கிலோவுக்கு ரூ. 10,000 குறைந்து ரூ. 2,30,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 5,000 அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,35,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 13,220 ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,05,760 கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை