Thursday, 02 July 2026, 08:59 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

சொந்த குடும்பத்தையே கொலை செய்தது ஏன்? பெங்களூரு இளம்பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

Published On: 2026-06-26 21:30:47 | Reporter: Admin

News Image

புதுச்சேரி: பெங்களூரில் தனது தந்தை, தாய் மற்றும் தங்கையை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த இளம்பெண், தற்போது அளித்துள்ள வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே கே.ஆர். புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சோமசுந்தரம் (55) - முத்துலட்சுமி (48) தம்பதியர். இவர்களுக்கு ஸ்வேதா (24), சுப்ரியா (20) ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். ஸ்வேதாவை தவிர மற்ற 3 பேரும், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 22ஆம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டனர். முத்துலட்சுமி, சுப்ரியா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சோமசுந்தரம் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில், மூத்த மகளான ஸ்வேதாவும், அவரது காதலன் கென்னத்தும் 2 மாதங்களுக்கு முன்பு இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிவந்தது தெரியவந்தது. இதனை அறிந்த ஸ்வேதாவின் தந்தை சோமசுந்தரம், தாய் முத்துலட்சுமி, தங்கை சுப்ரியா ஆகியோர் அவரை பார்க்க சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில், சொந்த குடும்பத்தினரையே கொலை செய்துவிட்டு காதலனுடன் சேர்ந்து அங்கிருந்து ஓடி தலைமறைவானதும் தெரியவந்தது. இந்த 3 பேர் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட ஸ்வேதா, அவரது காதலன் கென்னத் ஆகிய இருவரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி புதுச்சேரி ரயில் நிலையம் அருகே ஸ்வேதாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது அப்பா, அம்மா, தங்கை ஆகிய மூவரையும் தான் கத்தியால் குத்தி கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்தார். ஸ்வேதா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு வீட்டில் எந்தவித சுதந்திரமும் அளிக்கப்படவில்லை. அதனால் கடுமையான மன அழுத்தத்திலும், தனிமையிலும் வாழ்ந்து வந்தேன். இந்த சமயத்தில்தான் கென்னத் என்ற இளைஞரை காதலித்தேன். ஆனால் எங்கள் காதலுக்கு எனது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சீகேஹள்ளியில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து, அங்கு காதலனுடன் 'லிவ்-இன்' உறவில் வாழ்ந்து வந்தேன். பின்னர் புதிய தொழில் தொடங்க எண்ணி, பல இடங்களில் சுமார் 30 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினேன். இந்த கடன் நோட்டீஸ்கள் பெற்றோரின் வீட்டு முகவரிக்கு சென்றதால் எனக்கும், மகளுக்கும் இடையே சம்பவத்தன்று கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நான், எனது தாய் முத்துலட்சுமியை கத்தியால் குத்தி கொலை செய்தேன். பின்னர் எனது காதலன் கென்னத், எனது தாயின் உடலை குளியலறைக்கு இழுத்துச் செல்லவும், ரத்த கறைகளை சுத்தம் செய்ய உதவினார். பின்னர் வீட்டுக்கு வந்த எனது தங்கை சுப்ரியாவையும் கத்தியால் குத்தினேன். அவளது சத்தம் கேட்டு ஓடிவந்த தந்தை சோமசுந்தரத்தையும் சரமாரியாக கத்தியால் குத்தினேன். பயத்தின் காரணமாகவே தந்தை மற்றும் தங்கையை கொலை செய்தேன்" என ஸ்வேதா தனது வாக்கு வாக்குமூலத்தில் கூறியிருந்தார். மேலும், மூவரையும் கொலை செய்த பிறகு, இருவரும் பைக்கில் திருவண்ணாமலைக்கு தப்பி ஓடியுள்ளனர். அங்கு பைக் பழுதானதால் ஸ்வேதாவை மட்டும் புதுச்சேரி பேருந்தில் ஏற்றிவிட்ட கென்னத், அங்கிருந்து தலைமறைவாகி உள்ளார். இதனால் கென்னத்தை பிடிக்க தமிழ்நாடு மற்றும் கர்நாடக போலீசார், 6 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடிவந்த நிலையில், புதுச்சேரி அண்ணா சாலை பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று இரவு 10 மணியளவில் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, உருளையன்பேட்டை போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, இரவு 10.30 மணியளவில் கென்னத்தை கைது செய்தனர். ஸ்வேதா தனது வாக்குமூலத்தில், கென்னத் கொலை செய்யவில்லை என்று கூறியிருந்தாலும், சோமசுந்தரம் உயிரிழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வழக்கில் பெரிய திருப்பமாக அமைந்திருக்கிறது. அவருடைய வாக்குமூலத்தில், “கென்னத் தான் எங்களை கத்தியால் குத்தினார்” என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த கொடூரக் கொலைகளில் கென்னத்தின் பங்கு குறித்து அறிய அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7