Wednesday, 01 July 2026, 06:32 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Sports / Article

Sports

தூத்துக்குடி: கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது- 2.2 கிலோ பறிமுதல்

Published On: 2026-06-26 21:27:47 | Reporter: Admin

News Image

தூத்துக்குடி மாவட்டத்தில் தெர்மல்நகர், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி தெர்மல்நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தெர்மல்நகர் கோல்டன் வே-பிரிட்ஜ் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியான ஒரு நபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மிதுன்குமார் (வயது 33) என்பதும், அவர் 1 கிலோ 100 கிராம் கஞ்சா விற்பனை செய்வற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக தெர்மல்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபாஜென்சி வழக்குப்பதிவு செய்து, மேற்சொன்ன நபரை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடராஜபுரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியான ஒரு நபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் கோவில்பட்டி, நடராஜபுரத்தைச் சேர்ந்த செல்வம்(35) என்பதும், அவர் 1 கிலோ கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இது தொர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து, மேற்சொன்ன நபரை கைது செய்து, அவரிடமிருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார். ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொங்கராயகுறிச்சி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியான ஒரு நபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் கொங்கராயகுறிச்சியைச் சேர்ந்த கந்தன் மகன் சுதாகர்(31) என்பதும், அவர் 100 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து, மேற்சொன்ன நபரை கைது செய்து, அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7