Wednesday, 01 July 2026, 06:32 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

தொடர் விடுமுறை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Published On: 2026-06-26 21:23:47 | Reporter: Admin

News Image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவிழா, விடுமுறை, பண்டிகை மற்றும் சுபமுகூர்த்தம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் பக்தர்கள் வருவது வழக்கம். அந்த வகையில், இன்று மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை தினம் என்பதால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை முதலே திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் அவர்கள் கடலிலும், நாழிக்கிணறு தீர்த்தத்திலும் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பொது தரிசனத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நெல்லையில் நடைபெறும் ரயில்வே யார்டு பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்செந்தூரில் இருந்து நெல்லை செல்லும் பாலக்காடு ரயில் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். நாளை சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் இரண்டு நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் அதிகமாக இருக்கும் எனத்தெரிகிறது.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7