Wednesday, 01 July 2026, 07:44 AM | TamilnaduePaper
Published On: 2026-06-26 21:09:49 | Reporter: Admin
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும் அதிகாரமும் கொண்ட இந்த உயர் பதவியின் அதிகாரப்பூர்வக் காலம் ஓராண்டு மட்டுமே என்ற போதிலும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நீடிக்கும் வரை இப்பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் இருந்துகொண்டு தமிழக அரசின் முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பதும், மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடமிருந்து முறைப்படிப் பெற்றுத் தருவதுமே இந்தச் சிறப்புப் பிரதிநிதியின் முதன்மையான மற்றும் முக்கியப் பொறுப்பாகும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொறுப்புக்கு தனது படத்தை தயாரித்தவருக்கு விஜய் வழங்கியிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. வெங்கட நாராயணா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.