Wednesday, 01 July 2026, 07:41 AM | TamilnaduePaper
Published On: 2026-06-26 21:00:50 | Reporter: Admin
தவெக அரசின் முதல் பட்ஜெட் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று சில கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலையொட்டி கடந்த ஆட்சியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசின் முதல் பட்ஜெட் எப்போது? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. இந்நிலையில் நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஜூலை 2 முதல் 22 ஆம் தேதி வரை முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துறைகள்ரீதியாக அமைச்சர்கள், செயலர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.