Wednesday, 01 July 2026, 07:42 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Sports / Article

Sports

ஃபிஃபா உலகக் கோப்பை: துனிசியாவை வீழ்த்தி நெதர்லாந்து அசத்தல்!

Published On: 2026-06-26 20:59:50 | Reporter: Admin

News Image

ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் துனிசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் கேன்சாஸ் சிட்டியில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் துனிசியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலேயே நெதர்லாந்து அணி இரண்டு கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் கேப்டன் எல்லிஸ் சிக்ரி முதல் கோலை அடிக்க, 7-வது நிமிடத்தில் பிராபி இரண்டாவது கோலை அடித்தார். இதுவரை 58 உலகக் கோப்பை ஆட்டங்களில் விளையாடியுள்ள நெதர்லாந்து அணி முதல் முறையாக ஆட்டத்தின் முதல் 7 நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்துள்ளது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் துனிசியா வீரர் மஸ்டௌரி 54-வது நிமிடத்தில் அந்த அணிக்காக முதல் கோலை அடித்தார். 62-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வான் ஹெக் கோல் அடிக்க, நெதர்லாந்து அணியின் கோல் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. துனிசியாவுக்கு எதிரான வெற்றியின் மூலம் குரூப் எஃப் பிரிவில் நெதர்லாந்து புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. அந்த அணி ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் வருகிற ஜூன் 29 ஆம் தேதி மொராக்கோவை எதிர்கொள்கிறது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7