Wednesday, 01 July 2026, 09:04 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

நிக்காத பஸ்சுக்கு பஸ் ஸ்டாப் எதுக்கு? கனிமொழியை கும்பலாக கேள்வி கேட்ட பெண்கள்

Published On: 2026-06-26 20:42:52 | Reporter: Admin

News Image

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி. இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள ஓடக்கரை பகுதியில் புதியதாக கட்டியுள்ள பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்தார். இந்த பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்த கனிமொழியிடம், அந்த பகுதி பெண்கள் இந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்தே நிற்பது இல்லை, ஒரு வாரத்தில் பேருந்தை முதலில் நிற்க சொல்லுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த கனிமொழி எங்க முதலமைச்சராக இருந்தால் ஒரு வாரத்தில் பண்ணி இருப்பேன் என்று பதில் கூறினார். கனிமொழியின் இந்த பதிலால் அந்த பெண்கள் அதிருப்தி அடைந்தனர். அவர்கள் அப்படி பேசாதீங்க என்று கூறினர். இதையடுத்து, கனிமொழி அந்த இடத்தில் இருந்து எந்த பதிலும் கூறாமல் சிரித்துக் கொண்டே சென்று விட்டார். இதனால், அங்கிருந்த பெண்கள் மேலும் ஆவேசம் அடைந்தனர். பேருந்து நிறுத்தம் திறந்தால் போதுமா? பேருந்து நிற்க வேண்டாமா? என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும், ஆட்சியில் திமுக இல்லாவிட்டாலும் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன்தானே ஆவார். அவர் திமுகதானே. அவர் நினைத்தால் செய்யலாம்தானே? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், கடந்த 5 ஆண்டுகாலமாக திமுக-வின் ஆட்சியே நடைபெற்று வந்தது. அப்போதும் பேருந்து நிற்கவில்லையே ஏன்? என்றும் பொதுமக்கள் பெண்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். தூத்துக்குடியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி பெண்கள் கேள்விக்கு முறையாக பதிலளிக்காமல் சென்றதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த ஓடக்கரை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை முறையாக நிறுத்தி செல்ல தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7