Wednesday, 01 July 2026, 09:04 AM | TamilnaduePaper
Published On: 2026-06-26 20:40:52 | Reporter: Admin
திருப்பத்தூர்: உடல்நலக் குறைவால் உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்தினருக்கு 2011 காக்கி உதவும் கரங்கள் நண்பர்கள் ஒன்றினைந்து ரூ.25 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை நிதியுதவி வழங்கினார்கள். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (36) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் சிலம்பரசன் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 30.07.2025 அன்று உடல் நலக்குறைவால் சிலம்பரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்தினருக்கு அவருடன் 2011-ம் ஆண்டு காவலர்களாக தேர்வான காவலர்கள் குழுவாக இணைந்து 25 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை நிதியாக திரட்டி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி அக்க்ஷய் அனில் வாகரே முன்னிலையில் இறந்த தலைமை காவலரின் மனைவி செந்தமிழ் செல்வி மற்றும் அவரது மகன் லக்சன் சாய் (6) மகள் சாமீனி (5) ஆகியோரிடம் காசோலையை வழங்கினர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயிரிழந்த தலைமை காவலரின் பிள்ளைகளுக்கு சாக்லேட் கொடுத்து ஊக்குவித்தார். உயிரிழந்த தலைமை காவலரின் மகன் லக்சன் சாய் (6), மகள் சாமீனி (5) உள்ளிட்ட இரு குழந்தைகளுக்கு 22 லட்சத்து 19 ஆயிரத்து 670 ரூபாயை நிரந்தர வைப்பு தொகையாக வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். அதேபோல் அவரது மனைவிக்கு காசோலையாக 3 லட்சத்து 32 இரண்டு ஆயிரத்து 330 ரூபாய் காசோலையாக வழங்கினர். இந்த துயரமான நேரத்தில் சக காவலரின் குடும்பத்திற்கு துணையாக நிற்பது நமது கடமை என்றும் இந்த நிதியுதவியை வழங்கிய போலீசார் தெரிவித்தனர். காவல்துறையினரின் மனிதநேயமிக்க செயலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.