Wednesday, 01 July 2026, 09:03 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Sports / Article

Sports

FIFA WC: ஜெர்மனியை வீழ்த்தி மிரள வைத்த ஈக்வடார்.. அடுத்த சுற்றுக்கு முன்னேறி புதிய சாதனை

Published On: 2026-06-26 20:33:52 | Reporter: Admin

News Image

நியூ ஜெர்சி: பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் இ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில், பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஈக்வடார் அணி இமாலய அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த வரலாற்று வெற்றியின் மூலம் ஈக்வடார் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. நியூ ஜெர்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்திலேயே ஜெர்மனியின் லெராய் சானே ஒரு அபாரமான கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை தந்து அதிர்ச்சி அளித்தார். இந்த கோல் 'வார்' தொழில்நுட்ப சோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டது. தொடக்கத்திலேயே கோல் வாங்கி பின்தங்கிய போதிலும், ஈக்வடார் அணி சற்றும் மனம் தளராமல் அசாத்தியமான தற்காப்பு மற்றும் பதில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர்ந்து ஜெர்மனிக்கு கடுமையான அழுத்தம் கொடுத்த ஈக்வடார் அணிக்கு, நில்சன் அங்குலோ ஒரு அபாரமான கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். இது இந்த உலகக் கோப்பையில் ஈக்வடார் அணி பதிவு செய்த முதல் கோலாகும். இதன் பின்னர் ஆட்டத்தின் போக்கே மாறியது. ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பின் போது, ஜெர்மனியின் அனுபவ கோல்கீப்பர் மானுவல் நோயர் செய்த தவற்றைப் பயன்படுத்திய கொன்சாலோ பிளாட்டா, பந்தை கோல் போஸ்ட்டிற்குள் தள்ளி ஈக்வடாரை 2-1 என முன்னிலை பெறச் செய்தார். கடைசி 10 நிமிடங்களில் ஜெர்மனி அணி கோலை சமன் செய்ய தீவிரமாகப் போராடிய போதிலும், ஈக்வடார் தற்காப்பு வீரர்கள் அரண் போல நின்று அதனைத் தடுத்து நிறுத்தினர். இறுதியில் ஈக்வடார் அணி 2-1 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்த பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் குராசோவை 2-0 என வீழ்த்திய ஐவரி கோஸ்ட் அணி 2வது இடத்தைப் பிடித்தது. தோல்வியடைந்தாலும் ஜெர்மனி அணி குரூப் இ பிரிவில் முதலிடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. அதே நேரத்தில், இந்த இமாலய வெற்றியின் மூலம் சிறந்த 3வது இடம் பிடிக்கும் அணிகளின் பட்டியலில் இடம் பிடித்து ஈக்வடார் அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7