Wednesday, 01 July 2026, 10:22 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Life Style / Article

Life Style

டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்ற உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு

Published On: 2026-06-26 20:20:54 | Reporter: Admin

News Image

சென்னை: தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு கல்லூரிக் கல்வியியல் பணிகளின் கீழ் அரசுக் கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2,600க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இதற்கான பாடவாரியாக முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இத்தேர்வை எழுதியவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை https://www.trb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம். மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் முகப்புப் பக்கத்தில் இதற்கான இணைப்பு இடம்பெற்றுள்ளது. அதில் பாடவாரியாக தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் PDF வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேர்வர்களின் விண்ணப்ப எண், பதிவு எண், பெயர், பிறந்த தேதி, வகுப்பு மற்றும் இரண்டு தாள்களிலும் பெற்ற மதிப்பெண்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இத்தேர்விற்கான இறுதி விடைக்குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இத்தேர்விற்கு விண்ணப்பித்த 47,047 விண்ணப்பதாரர்களுள் 42,064 விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் கலந்து கொண்டனர். இவ்வாரிய இணையதளத்தில் Part A & B-க்கான உத்தேச விடைக்குறிப்பை Objection tracker உடன் 05.01.2026 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்களிடமிருந்து 05.01.2026 முதல் 13.01.2026 வரை ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டன. மனுதாரர்களால் உரிய ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆட்சேபனை மனுக்களும் பாட வல்லுநர்களால் முழுமையாகப் பரிசீலிக்கப்பட்டு, இறுதி விடைக்குறிப்பு (Final Answer Key) தயாரிக்கப்பட்டு, 25.06.2026 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பாட வல்லுநர்களால் வழங்கப்பட்டுள்ள விடைக்குறிப்பே இறுதியானது ஆகும். இது சார்ந்த எந்த ஆட்சேபனை கோரிக்கை மனுக்களும் இவ்வாரியத்தால் ஏற்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இறுதி விடைக் குறிப்பின் அடிப்படையில் வினாத்தாட்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வு எழுதிய அனைத்து விண்ணப்பதார்களின் மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. பணி அனுபவத்திற்காக மதிப்பெண் கோரும் விண்ணப்பதார்களுக்கு அதற்கான மதிப்பெண். அசல் ஆவணங்கள் மதிப்பீடு குழுவால் அசல் ஆவணங்கள் சரிபார்ப்பிற்கு பின் வழங்கப்படும். அசல் ஆவணங்கள் சரிபார்ப்பின் போது, அசல் கல்விச் சான்றிதழ்கள், பணி அனுபவ சான்றிதழ், பல்கலைக் கழகங்களால் வழங்கப்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை கல்வித் தகுதிகளுக்கான இணைத்தன்மை அரசாணை, M.Phil/Ph.D ஆகிய கல்வித் தகுதிகள் தொடர்பான Relevance சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரிக் கல்வி இணை இயக்குநரின் தலைமையிலான நிபுணர் குழவினால் அனைத்து அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு இந்நிபுணர் குழவினால் பணி அனுபவத்திற்காக வழங்கப்படும் மதிப்பெண்கள் மட்டுமே இறுதியானதாகும். அசல் ஆவணங்கள் சரிபார்ப்பிற்குப் பின்னர் அளிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் ஏதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அசல் ஆவணங்கள் சரிபார்ப்பிற்கான இடம் மற்றும் தேதி குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வானவர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், நேர்காணலுக்கு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அனுபவத்தில் அடிப்படையிலான மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் மதிப்பெண்கள் சேர்ந்து, இறுதி பட்டியல் வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து, காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தகுதியானவர்களுக்கு பணி நியமனம் அளிக்கப்படும்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7