Wednesday, 01 July 2026, 10:20 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1½

Published On: 2026-06-26 20:06:55 | Reporter: Admin

News Image

கோடி

திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை போன்றவற்றை செலுத்துகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணத்தை எண்ணுவதற்கு அறநிலையத்துறை கமிஷனரிடம் அனுமதி பெற்று, திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் மலைக் கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் இணை கமிஷனர் ரமணி, அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன், மோகனன், உஷா ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் 29 நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 58 லட்சத்து 72 ஆயிரத்து 540, திருப்பணி உண்டியல் காணிக்கையாக ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 384 என மொத்தம் ரூ.1 கோடியே 61 லட்சத்து 45 ஆயிரத்து 924 ரொக்கம் கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 603 கிராம், வெள்ளி 5 கிலோ 780 கிராம் காணிக்கையாக கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7