Wednesday, 01 July 2026, 11:36 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!

Published On: 2026-06-26 20:00:55 | Reporter: Admin

News Image

சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து - X சோழவரம் அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்தில் இன்று (ஜூன் 26) காலை தீ விபத்து ஏற்பட்டது. ஆந்திரத்தில் இருந்து சென்னை நோக்கி நேற்றிரவு புறப்பட்ட ஆம்னி பேருந்து, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே காரனோடை பகுதியில் வந்துகொண்டிருந்தபோது இன்று காலை தீ விபத்தில் சிக்கியது. பேருந்தில் இருந்து புகை வருவதைக் கண்ட ஓட்டுநர், உடனடியாக சாலையோரம் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் படையினர், போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7