Wednesday, 01 July 2026, 11:37 AM | TamilnaduePaper
Published On: 2026-06-26 19:48:57 | Reporter: Admin
தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக- அதிமுக என இரு கட்சிகள் மோதிய நிலையில், இந்த கட்சிகளுக்கு எதிராக தேமுதிக தலைமையில் மக்கள் நல கூட்டணி உருவானது. இந்த கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், ஜி.கே.வாசன் என பல கட்சிகள் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், திமுக கூட்டணி 98 இடங்களின் வெற்றி பெற்று 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதே நேரம் தேமுதிக தலைமையிலான மக்கள் நல கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது. இதனையடுத்து அரசியல் களம் மாறிய நிலையில் திமுக கூட்டணியில் மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் இணைந்த்தது. அடுத்தாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என அடுத்தடுத்து கடந்த 8 வருடங்களாக இந்த கூட்டணி வெற்றியை பெற்று வந்தது. இந்த நிலையில் தான் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி நீடித்த நிலையில், தேமுதிக கூடுதலாக இந்த கூட்டணியில் புதிதாக இணைந்தது. இந்த நிலையில் இந்த தேர்தலில் திமுகவின் மிகப்பெரிய கூட்டணி தோல்வியை தழுவியது. மொத்தமாக 73 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. அதே நேரம் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே ஆட்சி அமைக்க மேலும் 10 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ் பல்டி அடித்தது. அடுத்தாக கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெகவிற்கு தாவியது. அடுத்தாக மதிமுகவும் தவெக கூட்டணியில் இணைய காய்நகர்த்தி வருகிறது. இந்த நிலையில் கொள்கை கூட்டணி என கூறி வந்த இந்த கட்சிகள் ஒரே ஒரு தோல்விக்கு கூட்டணியில் இருந்து விலகி திமுகவை விமர்சனம் செய்து வருகிறது. எனவே வரும் நாட்களில் கூட்டணியே வேண்டாம் என திமுக தலைமை யோசித்து வருகிறது. இதற்கு ஏற்ப நேற்று திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டணி பற்றி எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். எப்போதுமே கலைஞர் அவர்கள் கூட்டணி அமைத்தால், அந்தக் கூட்டணியைப் பாதுகாப்பாக வைத்திருப்பார். அவர்களாகத்தான் செல்வார்களே தவிர, கலைஞர் இதுவரை விட்டது கிடையாது. அதேபோன்றுதான் நானும் அவர் வழி நின்று, எந்தக் கூட்டணியாக இருந்தாலும் விடமாட்டேன். ஆனால் அவர்களாகச் சென்றால், நான் ஒன்றும் சொல்ல முடியாது. அதுதான் என்னுடைய கடமை. ஆனால் இன்றைக்கு இருக்கும் மக்கள் எல்லாம், கூட்டணியே தேவை இல்லை என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக அதையும் நாங்கள் விரைவில் பரிசீலிப்போம், பரிசீலிப்போம், பரிசீலிப்போம் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சென்னை திரும்பிய திமுக தலைவர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, மாநிலங்களவை எம்.பி.சுதீஷ் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டாலும், திமுக கூட்டணியின் அடுத்த கட்டம் தொடர்பாகவும், தவெக அரசுக்கு எதிராக இணைந்து போராடுவது தொடர்பாக ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், திமுக தலைவரை ஸ்டாலின் விமர்சித்தது தொடர்பாகவும் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. காலையில் கூட்டணியே வேண்டாம் என பரிசீலிப்போம் என ஸ்டாலின் தெரிவித்த நிலையில், மாலையில் பிரேமலதா திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.