Wednesday, 01 July 2026, 02:12 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Entertainment / Article

Entertainment

"கரூரை கைகழுவி விட்டது போல, பெரியபாளையத்தையும் புறக்கணிக்கிறீர்களா முதலமைச்சரே" - நயினார் நாகேந்திரன்! - News7 Tamil

Published On: 2026-06-26 19:06:01 | Reporter: Admin

News Image

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கரூரை கைகழுவி விட்டது போல, பெரியபாளையத்தையும் புறக்கணிக்கிறீர்களா முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களே? திருவள்ளூர் பெரியபாளையம் தொழிற்சாலையில் அமோனியா வாயு தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து தமிழகத்தையே சோகக்கடலில் ஆழ்த்தியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தாரை இதுவரை நேரில் சென்று சந்திக்காத உங்கள் ஆணவமும் அலட்சியமும் கடும் அதிர்ச்சியளிக்கிறது. சினிமாக்காரர்களை தினசரி சந்தித்து சிரித்து பேசி மகிழும் உங்களுக்கு, உங்கள் ஆட்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல நேரமில்லையா அல்லது மனமில்லையா? ஒருவேளை பாதிக்கப்பட்டவர்கள் பனையூருக்கு வந்தால் தான் உங்கள் ஆறுதல் வார்த்தைகள் கிடைக்குமோ? பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை விட்டெறிந்து விட்டால் நமது கடமை முடிந்து விட்டது என அவர்களை சந்திக்காமல் நீங்கள் ஓரம் கட்டுவது என்ன விதமான மனநிலை? இதுமட்டுமா? சீரழிந்த சட்டம் ஒழுங்கு, கேள்விக்குறியாகியுள்ள பெண்களின் பாதுகாப்பு, பெருகிவரும் போதைப் பழக்கம், தவெகவினரின் அராஜகங்கள் என உங்கள் ஆட்சியில் நடக்கும் எந்த பிரச்சினையையும் நீங்கள் கண்டு கொள்வதில்லை என்பதற்கு, ஒரே நாளில் (23/06/2026) மட்டும் 10 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ள கொடூரமே சாட்சி. இப்படி எதைப்பற்றியும் கவலைப்படாமல், அடுத்த “நீரோ” மன்னன் போல முதல்வர் பதவியில் அமர்ந்துள்ள உங்களின் உண்மை முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கத் துவங்கிவிட்டது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஆட்டோ இம்யூன்(Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்” – நடிகர் விஷ்ணு விஷால்! இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? என்எல்சி நிறுவன பங்குகள் விற்பனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – பிரதமருக்கு, முதலமைச்சர் விஜய் கடிதம்! “குற்றங்களைக் கட்டுக்குள் கொண்டு வரத் தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7