Wednesday, 01 July 2026, 02:09 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - News7 Tamil

Published On: 2026-06-26 18:58:02 | Reporter: Admin

News Image

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 0.9 கி.மீ உயரத்தில் தமிழக கடலோர பகுதிகளின் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஆட்டோ இம்யூன்(Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்” – நடிகர் விஷ்ணு விஷால்! என்எல்சி நிறுவன பங்குகள் விற்பனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – பிரதமருக்கு, முதலமைச்சர் விஜய் கடிதம்! “குற்றங்களைக் கட்டுக்குள் கொண்டு வரத் தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7