Wednesday, 01 July 2026, 02:12 PM | TamilnaduePaper
Published On: 2026-06-26 18:57:02 | Reporter: Admin
சச்சினுடன் இந்தியாவுக்காக 12 போட்டிகளில் விளையாடிய ஒரே ஐஏஎஸ் அதிகாரி... யார்? - கிரிக்கெட்டிற்கு முன் யுபிஎஸ்சி வெற்றி!Published by:Malaiarasu Mnews18-tamilLast Updated:Jun 25, 2026 1:18 PM ISTஇந்தியாவில் மிகக் கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்றில் தேர்ச்சி பெற்ற போதிலும், கிரிக்கெட் மீதான அவரின் ஆர்வம், ஐஏஎஸ் என்கிற பதவியை விட ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக வாழ்க்கையைத் தொடர அவரை வழிநடத்தியது.+ Follow usOn Google1/7 யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு... இந்தியாவில் நடத்தப்படும் தேர்வுகளில் மிகவும் சவாலான ஒன்று. இந்தியாவின் உட்சபட்ச அதிகாரி சேவையான இந்தத் தேர்வை வருடம்தோறும் லட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர். எனினும், சிலர் மட்டுமே வெற்றி பெற முடிகிறது. இன்றும் அரசு வேலை, ஐஏஎஸ் பணி என்பது பலரின் கனவு. அந்தக் கனவை ஒரு கிரிக்கெட் வீரர் சாதித்திருக்கிறார் என்பது தெரியுமா? அதுவும், இந்தியாவுக்காக அறிமுகமாகும் முன்பு ஒரு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.