Wednesday, 01 July 2026, 02:10 PM | TamilnaduePaper
Published On: 2026-06-26 18:56:02 | Reporter: Admin
"இளைஞர்கள் அவங்ககிட்ட இருந்து இத கற்றுக்கொள்ள வேண்டும்" – கால்பந்தாட்ட லெஜென்ட்ஸ் குறித்து சுனில் சேத்ரி பேட்டிPublished by:MusthakLast Updated:Jun 25, 2026 6:03 PM ISTநடப்புத் தொடரில் ஜப்பான் அணி 4-0 என்ற கணக்கில் பெற்ற அபார வெற்றி, ஆசியக் கால்பந்து எந்தளவுக்கு அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது என்பதைக் காட்டுகிறது+ Follow usOn Google1/6 அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து போட்டிகளில், உலகக் கால்பந்தின் இரு பெரும் துருவங்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஜோடி தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து மிரள வைத்து வருகிறது. இந்த நிலையில், அவர்களின் இந்த அசாத்தியமான ஃபார்ம், நீண்ட கால கரியர் மற்றும் விளையாட்டு மீதான அர்ப்பணிப்பு குறித்து இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரி மனம்திறந்து பாராட்டியுள்ளார். உலக அரங்கில் இவர்களின் இந்த நீடித்த சிறப்பான ஆட்டம்தான் இவர்களை மற்ற வீரர்களிடம் இருந்து முற்றிலும் தனித்துக்காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.